Bitcoin NewsCryptocurrency News

Using Bitcoins in India cause 10 Year Jail! Here The Truth [தமிழ்]

Join Tamilrockers Latest Telegram Channel:

>>Join Tamilrockers Latest<<

bitcoin news indiaஇந்தியாவில்  Bitcoin எனும் Cryptocurrency பயன்படுத்தினால் 10 வருடம் சிறை தண்டனை என சில செய்தி வலைதளங்கள் நியூஸ் ஒன்றை வெளியிட்டு பிட்காயின் முதலீடு செய்தவர்களுக்கு பீதியை கிளப்பி வருகின்றன.

Bitcoin அல்லது பிற டிஜிட்டல் கரன்சியில் முதலீடு செய்தவர்கள் நன்கு தெரிந்துகொள்ளுங்கள் இது ஒரு தவறான செய்தி.

இதை சில செய்தி நிறுவனங்கள் ஊதி பெரிதாகிவிட்டனர். சில செய்தி நிறுவனங்கள் மட்டும் உண்மையை தெளிவாக வெளியிட்டுள்ளன.

உண்மை என்னவென்றால் இந்திய வருமான வரித்துறை, நிதித்துறை சார்பில் Bitcoin மற்றும் பிற Cryptocurrency புழக்கத்தை குறைக்க 10 வருடம் சிறை என்பது போன்ற ஒரு வரைவை (Draft)  தாக்கல் செய்யபோவதாகத்தான் தகவல்.

இது வெறும் வரைவுதான், இது இந்திய அரசால் அங்கீகரிக்கப்படுமா, மாற்றப்படுமா என்பது இரண்டாம் பட்சம்.

எனவே அரசு தரப்பில் இருந்து அதிகாரபூர்வமான  அறிக்கை வரும் வரை இதுபோன்ற ஆதாரமற்ற போலியான செய்திகளை பார்த்து Cryptocurrency இல் முதலீடு செய்தவர்கள் கவலைப்பட வேண்டாம்.

RBI ஏற்கனவே இந்தியாவில் உள்ள வங்கிகளில் Bitcoin பண பரிவர்த்தனை செய்ய கூடாது என சட்டம் இயற்றியது நம் அனைவரும் அறிந்ததே.   எனினும் Peer to Peer முறையில் Bitcoin டிரேடிங் இந்தியாவில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

ஒரு வேலை இந்த பரிவர்த்தனை முறையையும் முற்றிலுமாக தடுக்க இந்திய அரசுக்கு நோக்கம் இருக்கலாம்.

பிட்காய்ன் போன்ற டிஜிட்டல் பணங்களால் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு பெரிதும் பாதிப்பு ஏற்படாதவரை, இந்திய அரசு எந்த கண்டிப்பான நடவடிக்கையும் எடுக்காது என்பது என் சொந்த கருத்து.

Subscribe to Tamilrockers Latest

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Comments:

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker